சிக்கன் நுகற்ஸ்
தேவையான பொருட்கள்:
கோழி (முள்ளில்லாத தசைப்பகுதி) - ஒரு கிலோ
முட்டை (வெள்ளைக்கரு) - (2-4)
ரஸ்க்தூள் (காய்ந்த பாண்தூள்) - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பலகையில் கோழியின் முள்ளில்லாத தசைப்பகுதியை வைத்து கூர்மையான கத்தியினால் (விரும்பிய வடிவில் அல்லது விரும்பிய உருவத்தில்) விரும்பிய அளவில் துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டியதுண்டுகள், (அரைகால் தேக்கரண்டி) உப்பு, தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.
நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு அதிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்த பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக்கரு, உப்பு ஆகியவற்றை எக் பீட்டரினால் நன்றாக நுரைக்கும்படி அடித்து வைக்கவும்.
ஒரு வாய் அகண்ட தட்டில் (உணவு உட்கொள்ளும் தட்டு) ரக்ஸ்தூளை(காய்ந்தபாண்தூள்)போட்டு பரப்பவும்.
அதன் பின்பு வெட்டிசுத்தம் செய்த கோழிஇறைச்சி துண்டு ஒன்றை எடுத்து அதனை முட்டையில் நனைக்கவும்.
முட்டையில் நனைத்தகோழி இறைச்சி துண்டை ரக்ஸ்தூள் (காய்ந்த பாண்தூள்) உள்ள தட்டில் போட்டு நன்றாக ரக்ஸ்தூளை கோழி இறைச்சியில் பிரட்டவும் (ரக்ஸ்தூளினால் கோழி இறைச்சியின் எல்லா பக்கமும் (கோழி இறைச்சி வெளியில் தெரியாதவாறு) நன்றாக மூடும்படி).
ரக்ஸ்தூள் பிரட்டிய கோழி இறைச்சிதுண்டை கவனமாக (கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்தூள் விழுந்து விடாமல்) எடுத்து அதனை ஒரு தட்டில் வைக்கவும்.
இதனைப்போல எல்லா கோழித்துண்டுகளுக்கும் செய்து முதலில் கோழித்துண்டினை வைத்த தட்டில் வைக்கவும்.
இந்த கோழித்துண்டுகளை (5-10) நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும் (இல்லாவிட்டால் எண்ணெயில் பொரிக்கும் கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்துள் கோழியிறைச்சியை விட்டு பிரிந்து விடும் ).
அதன் பின்பு இதனை ஒரு பாத்திரத்தில் வைத்து காற்று போகாதவாறு நன்றாக மூடி அல்லது பாலித்தீன் (ஒயில் தாள்) தாளில் அல்லது பாலித்தீன் பையில் போட்டு நன்றாக மூடிக்கட்டவும்.
மூடிக்கட்டிய பின்பு இதனை ப்ரிசரில் வைக்கவும் (தேவையான அளவுகளில் பல பைகளிள் போட்டு நன்றாக மூடி கட்டி வைக்கலாம் இதில் திறக்காமல் இருக்கும் பையில் உள்ள கோழித்துண்டுகள் 3 மாதங்கள் வரை பழுதடையாமல் வைத்து உண்ணலாம்).
கோழி நுகற்ஸ் தேவையான நேரங்களில் தேவைப்படும் பைகளை எடுத்து திறந்து ஒரு தட்டில் வைத்து அதனை சிறிது நேரம் அப்படியே வைத்து குளிர் இல்லாமல் செய்யவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி) வைத்து தாட்சி(வாணலி) சூடானதும் தேவையானளவு எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கோழிநுகற்ஸை போட்டு பொன்னிறமாக வரும்படி பொரிக்கவும் (நுகற்ஸ் குளிருடன் இருந்தால் அதன் உள்ளிருக்கும் கோழி இறைச்சி பொரியாது).
நன்றாக பொரிந்த பின்பு இதனில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை ஒரு மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
சிறிது நேரத்தின் பின்பு சுவையான சத்தான சிக்கன் நுகற்ஸ் தயாராகி விடும்.பின்பு ஒரு தட்டில் கோழி நுகற்ஸ், தக்காளிபழ சாஸ், பொம்பிரீட்ஸ் ஆகியவற்றை வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
கோழி இறைச்சி எல்லோராலும் விரும்பகூடிய சுவையுடையதும் புரதச்சத்து மிக்கதும், மேலும் இன்றியமையாத அமினோஅமிலங்களையும் குறைந்த கார்போஹைட்ரேடினையும் கொண்டுள்ளதும், அத்துடன் இதில் சக்தி(Energy), ஈரப்பதம்/நீர்(Moisture), புரதம்(Protein)கொழுப்பு(fat), தாதுக்கள்(Minerals), கால்சியம்(Calcium), பாஸ்பரஸ்(Phosporous), ரைப்போஃப்ளேவின்(Riboflavin), போலிக்அமிலம்(Folic acid) ஆகிய சத்துகள் அடங்கியதும் ஆகும். இதில் செய்யப்பட்ட சிக்கின் நுகற்ஸில் இதில் அடங்கிய சகலசத்துகளுடன், மாப்பொருள், வைட்டமின் ஆகிய சத்துகள் அடங்கியது அத்துடன் சுவையானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய ஓர் சிற்றுண்டி ஆகும். இதனை எல்லா நாட்டிலுள்ள மக்களும் விரும்பி உண்பார்கள் ஆகவே இதனை செய்து உண்ணவும். எச்சரிக்கை - கோழி இறைச்சி அலர்ஜியுள்ளவர்கள், இருதயநோயாளர், சர்க்கரைநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - எல்லா வினிகர் சேர்க்கவும் (வினிகர் சேர்த்தால் தான் மற்றைய இறைச்சி வகைகள் மிக விரைவாக பொரியும் எல்லாவிட்டால் இறைச்சி பொரியும் போது ரக்ஸ்தூள் கருகிவிடும்). கவனிக்க வேண்டிய விசயங்கள் - கோழி இறைச்சி வெளியில் தெரியாதவாறு ,கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்தூள் விழுந்து விடாமல், நுகற்ஸ் குளிருடன் இருந்தால் அதன் உள்ளிருக்கும் கோழி இறைச்சி பொரியாது, காற்று போகாதவாறு நன்றாக மூடி அல்லது பாலித்தீன் (ஒயில் தாள்) தாளில் அல்லது பாலித்தீன் பையில் போட்டு நன்றாக மூடிக்கட்டவும், கோழிநுகற்ஸை செய்து காயவைத்தவுடனும் இதனை பொரிக்கலாம்.