சிக்கன் ஜால்ஃப்ரெஸி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ

குடை மிளகாய் - 2

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கறிமசாலா - 1 டீஸ்பூன்

சில்லி பவுடர் - அரை ஸ்பூன்

சீரகப்பொடி - அரைஸ்பூன்

மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 2

மல்லி இலை - சிறிது

செய்முறை:

சிக்கனை சிறிய துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை, குடை மிளகாய் கட் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி வெங்காயம் தாளித்து, இஞ்சிபூண்டு வதக்கி, குடைமிளகாய் சேர்க்கவும், பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.

பின்பு கறிமசாலா, சில்லி பவுடர், சீரகப்பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்த்து உடன் சிக்கன் சேர்க்கவும், தக்காளி சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.

பின்பு திறந்து சிக்கன் வெந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான சிக்கன் ஜால் ஃப்ரெஸி ரெடி. இதனை ப்ளைன் ரைஸ், சப்பாத்தி, நாணுடன் பரிமாறலாம்

குறிப்புகள்:

இது பார்ப்பதற்கு பிரட்டினாற் போல் இருக்க வேண்டும். பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளகாய்களை கலந்து உபயோகிக்கலாம். குடை மிளகாய் வாங்கும்போது இளம்பச்சை நிறமாக லைட் வெயிட்டாக பார்த்து வாங்கவும். இல்லாவிடில் விதையும், அதன் வாடையும் தூக்கலாக இருக்கும்.