சிக்கன் சாபீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - கால் கிலோ வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 2 இஞ்சி

பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சீரக தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு தூள் - கால் தேக்கரண்டி பட்டை - ஒரு துண்டு எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மல்லிதழை - 2 கொத்து எலுமிச்சைசாறு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சி

பூண்டு விழுது

கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்

கால் தேக்கரண்டி மிளகாய் தூள்

அரை தேக்கரண்டி மிளகு தூள்

அரை தேக்கரண்டி சீரக தூள்

சோம்பு தூள்

உப்பு

தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை

வெங்காயம்

பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி

பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள்

தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு மீதம் உள்ள மசாலா தூள் வகையை சேர்த்து வதக்கவும்.

பிறகு வேக வைத்த சிக்கன்

எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும். மூடிபோட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் வைக்கவும். பிறகு மூடியை திறந்து மல்லிதழை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான சிக்கன் சாபீஸ் ரெடி

குறிப்புகள்: