சாஸேஜ் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சம்பா அரிசி / பாசுமதி அரிசி - ஒன்றரை கப் சிக்கன் சாஸேஜ் - 250 கிராம் தேங்காய்ப் பால் - ஒரு கப் தயிர் - 3 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 4 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி பிரியாணி மசாலாத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி எண்ணெய் - 5 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி தாளிக்க: பட்டை - ஒரு துண்டு ஏலம் - 2 கிராம்பு - 3 பந்தன் இலை (ரம்பை) - ஒரு துண்டு (விரும்பினால்)
செய்முறை:
அரிசியைக் களைந்து தேங்காய்ப் பால் மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊறவிடவும். சாஸேஜை துண்டுகளாக நறுக்கி இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம்
தக்காளியை நீளமாகவும்
கொத்தமல்லித் தழையை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து
கால் பங்கு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும்
அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லித் தழை மற்றும் தயிர் சேர்க்கவும்.
ஊறிய அரிசியுடன் வதக்கிய வெங்காயக் கலவை மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து சாதம் தயார் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி
மீதியுள்ள வெங்காயம்
இஞ்சி
பூண்டு விழுது
பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி
தூள் வகைகள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
வதக்கிய கலவையில் வறுத்த சாஸேஜ் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி
சிறு தீயில் மூன்று நிமிடங்கள் வைத்திருக்கவும். மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
வேக வைத்த சாதத்தில் பாதி சாதத்தின் மேல் சாஸேஜ் கலவையைப் பரவலாக வைக்கவும்.
அதன் மேல் மீதியுள்ள சாதத்தைப் போட்டு
சிறிது தண்ணீரில் கேசரிப் பவுடரைக் கரைத்து ஊற்றி 15 நிமிடங்கள் தம்மில் போட்டு
நன்கு கலந்து இறக்கவும்.
சுவையான
சூப்பரான குழந்தைகள் விரும்பும் சாஸேஜ் பிரியாணி தயார். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.