சான்ட்விச் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரவுண் பிரெட் - 8 துண்டுகள்

சீஸ் துருவல் - 1 கப்

(செடார், பார்மெஜான் சீஸ் கலவை)

சீனி சம்பல் - 1 கப்

(செய்முறை:http://www.arusuvai.com/tamil/node/4536)

பட்டர் - சிறிது

செய்முறை:

பிரவுண் பிரெட் துண்டுகளின் மேல் பட்டரை பூசவும்.

ஒரு பிரெட் துண்டின் மேல் ஒன்று அல்லது ஒன்றரை கரண்டி சீனி சம்பலை வைத்து அதன் மேல் சிறிது சீஸ் துருவலை பரப்பி வேறொரு பிரெட் துண்டால் மூடவும்.

இவ்வாறு ஏனைய துண்டுகளையும் செய்யவும். (4 வரும்)

பின்னர் இதனை டோஸ்டரில் போட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. எனினும் விரும்பினால் தக்காளி சோஸ் உடன் உண்ணலாம்.

குறிப்புகள்:

இதனை சாதாரண பிரெட்டிலும் செய்யலாம். ஆனால் பிரவுண் பிரெட் சத்தானது.