சாசேஜ் (sausage) சீஸ் ப்ரெட் டோஸ்ட்





தேவையான பொருட்கள்:
சாசேஜ்(sausage) - 6
ப்ரெட் - 6
துருவிய சீஸ் - 100 கிராம்
முட்டை - ஒன்று
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் முட்டையை நன்றாக கலக்கி அதில் துருவிய சீஸை போட்டு கலந்து வைக்கவும்
பிறகு ஒரு நாண் ஸ்டிக் தவாவை அடுப்பில் ஏற்றி தீயை மிதமாக வைக்கவும்
அதன் பின்பு ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், அதில் ஒரு ப்ரெட் துண்டங்களை நனைத்து இரண்டு உள்ளங்கையால் அழுத்தி தண்ணீரை பிழிந்து ஒரு தட்டில் வைக்கவும்.
பின்பு அதில் ஒரு சாசேஜ் (sausage) வைத்து அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி சீஸ் கலவையை வைத்து ப்ரெட்டை மடக்கி மூடவும்.
பிறகு தவாவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர் விட்டு அதில் இந்த ப்ரெட்டை போட்டு பொன்னிறமானவுடன் திருப்பி போட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
இது காலை மாலை சிற்றுண்டிக்கு பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாம்,விரும்பி சாப்பிடுவார்கள்.