சாக்லெட் ரோல் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4 மைதா மாவு - 6 மேசைக்கரண்டி கொக்கோ பவுடர் - 3 மேசைக்கரண்டி சீனி - 4 மேசைக்கரண்டி ஐசிங்கிற்கு: ஐசிங் சுகர் - 150 கிராம் பட்டர் - 2 தேக்கரண்டி கொக்கோ பவுடர் - 2 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி பால் - தேவையான அளவு

செய்முறை:

பேக்கிங் ட்ரேயில் ஆயில் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும். மைதா மாவுடன் கொக்கோ பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும். ஐசிங் சுகருடன் கொக்கோ பவுடரை சேர்த்து சலித்து

பட்டர்

வெனிலா எசன்ஸ் மற்றும் தேவைக்கேற்ப பால் சேர்த்து ஐசிங் தயார் செய்யவும். ஒரு பவுலில் சீனியையும்

முட்டையையும் எடுத்துக் கொள்ளவும்.

சீனியையும்

முட்டையையும் சேர்த்து நன்கு பொங்கி வரும் வரை பீட்டரால் அடித்துக் கொள்ளவும். (முட்டை

சீனிக் கலவை எவ்வளவு பொங்குகிறதோ அந்த அளவிற்கு கேக் மென்மையாக இருக்கும்).

அதனுடன் மைதா

கொக்கோ கலவையை சேர்த்து

மெதுவாக கலந்து கொள்ளவும். (அதிகமாக கலக்கினால் கேக் மென்மையாக இருக்காது).

தயார் செய்த கலவையை கேக் ட்ரேயில் ஊற்றி

160c க்கு முற்சூடு செய்த அவனில் வைத்து 7 – 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். (அவனை பொறுத்து நேரம் வேறுபடலாம்). ஒரு கத்தியால் கேக்கை மெதுவாக பேப்பரிலிருந்து எடுக்கவும்.

லேசான சூடு இருக்கும்போதே கேக்கின் மீது ஐசிங்கை பூசி மெதுவாக ரோல் செய்யவும்.

ரோல் செய்த கேக்கை ஆயில் பேப்பரில் சுற்றி

பின் நியூஸ் பேப்பரில் இறுக சுற்றி

ஒரு மணித்தியாலம் பிரிட்ஜில் வைத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

டேஸ்டி & ஈஸி சாக்லெட் ரோல் கேக் தயார்.

குறிப்புகள்: