சாகோ போந்திபாய்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - அரை கப் (அ) பெரிய ஜவ்வரிசி - ஒரு கப் சர்க்கரை - கால் கப் கன்டண்ஸ்டு மில்க் (இனிப்பு) - கால் டின் பந்தன் / ரம்பை இலை - 4 துண்டுகள் பட்டை - 2 துண்டுகள் ஏலக்காய் - 4
செய்முறை:
ஜவ்வரிசியை 3 மடங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும். கண்ணாடி போல் இருக்க வேண்டும்.
வெந்ததும் நீர் இல்லாமல் வடித்து
சல்லடையில் போட்டு குளிர்ந்த நீரில் 4
5 முறை அலசி கஞ்சி இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் மீண்டும் சிறிது நீர் விட்டு பந்தன் இலை
ஏலக்காய் தட்டி போட்டு
பட்டை சேர்த்து கொதிக்க விட்டு அதனுடன் வெந்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
பாயாசம் பதம் வந்ததும் எடுத்து விடவும். பந்தன் மற்றும் பட்டை வாசத்துடன் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் சுவையான சாகோ போந்திபாய் தயார்.