சல்ஷா (மெக்சிக்கன் உணவு)
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 ஸ்பூன்
மிளகாய் - 3
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சீனி - 1/2 டீஸ்பூன் (விருப்பம் இருந்தால்)
வினிகர் - டீஸ்பூன் (விருப்பம் இருந்தால்)
செய்முறை:
தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், பூண்டு மிக சிறியதாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்
தக்காளி, குடைமிளகாய் கொத்தமல்லி, மிளகாய், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும் விருப்பம் இருந்தால் சீனி போட்டு கிளறி இறக்கி விருப்பம் இருந்தால் வினிகர் ஊற்றி கலந்து 1 வாரம் வைக்கலாம்.
சப்பாத்தி, சிப்ஸ், பிரட் இவற்றுடன் சாப்பிடலாம்