க்றிஸ்மஸ் ஹொலி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃபாண்டன்ட் - ஒரு எலுமிச்சை அளவு கலரிங் - பச்சை மற்றும் சிவப்பு ஐசிங் சுகர் - 2 மேசைக்கரண்டி அளவு பட்டர் ஐசிங் - ஒரு மேசைக்கரண்டி அளவு ரோலிங் பின் ப்ளாஸ்டிக் பாக் (Sanp Lock Bag) மென்மையான ப்ரஷ் ப்ளாஸ்டிக் இலை சிறிய பூ (அ) இலை கட்டர் (மறுபக்கம் வட்டமாக இருக்க வேண்டும்) கபாப் குச்சி

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். செய்வதற்கு மிகச் சுலபமான

அழகான கேக் அலங்காரம் இது.

முதலில் மூன்றில் இரண்டு பங்கு அளவு ஃபாண்டன்ட் எடுத்து

பச்சை நிறம் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். சிறிய உருண்டைகளாக உருட்டி

ப்ளாஸ்டிக் உறையின் மேல் வைத்து மெல்லிதாகத் தேய்த்து எடுக்கவும். (சட்டென்று உலர ஆரம்பிக்கும் எனவே ஒரு சமயத்தில் மூன்றிற்கு மேல் உருட்டி வைக்க வேண்டாம். தேவை வரும் வரை மீதி ஃபாண்டன்ட்டை காற்றுப் படாமல் 'க்ளிங் ராப்' கொண்டு சுற்றி வைக்கவும்) இலை பின்பக்கத்தை தேய்த்து வைத்திருப்பதன் மேல் அழுத்தினால் நரம்புகள் அழகாகப் பதிந்துவிடும். ப்ளாஸ்டிக் கவரோடு கையில் எடுத்துப் பிடித்து அழுத்தினால் எல்லா நரம்புகளும் சரியாகப் பதியும்.

படத்தில் காட்டியுள்ள விதமாக கட்டரின் பின்பக்கத்தால் வளைவுகளை வெட்டி எடுக்கவும். (உள்ளே சேரும் ஃபாண்டன்ட் மீதியை அவ்வப் போது குச்சியால் தட்டி மீதியோடு சேர்த்துக் குழைத்துப் பயன்படுத்தலாம்).

மறு பாதி இலையையும் இதேபோல் வெட்டி எடுத்தால் ஹொலி இலை வடிவம் கிடைக்கும்.

கரண்டி அல்லது வளைவான பொருட்கள் எதன் மீதாவது வைத்து உலரவிட்டால் இலைகள் வளைவாக வரும்.

இலைகளில் ஐசிங் சுகர் பட்டிருந்தால் மெதுவாக ப்ரஷ் செய்துவிடவும்.

மீதி ஃபாண்டன்ட்டில் சிவப்பு நிறம் சேர்த்துக் குழைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி காயவிடவும்.

கேக்கின் மேல் விரும்பிய விதத்தில் ஒட்டிவிடவும். பட்டர் ஐசிங்கை பாலட் நைஃபில் தொட்டு இலைகளில் எந்த இடம் (வளைவு) கேக்கில் படுகிறதோ அங்கு மட்டும் சிறிது வைத்து ஒட்டினால் போதும். பழங்கள் ஒட்டுவதற்கு

பட்டர் ஐசிங்குக்கு சில துளிகள் நீர் சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும். பழங்களை ஐசிங்கில் தொட்டு எடுத்தால் போதுமான அளவு ஐசிங் பட்டிருக்கும். எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்து மெதுவாக ஒட்டிவிடவும். (அழுத்தினால் உடைந்துவிடும்).

கப் கேக்களுக்கும்

க்றிஸ்மஸ் புட்டிங்கிற்கும் இது போல் இரண்டு மூன்று இலைகள் மட்டும் வைத்து அலங்கரிக்கலாம்.

சதுர கேக்கானால்

கேக்கை முழுவதாக ஐஸ் செய்ததன் பின்

மேலே சுற்றிலும் நீளமாக ஒரு வரி வைக்கலாம்.

குறிப்புகள்: