க்ரீன் பீன்ஸ் பீஃப் மசாலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 250 கிராம் (பெரியதாக கட் பண்ணவும்)

பீஃப் - 500 கிராம்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (சிறியதாக கட் பண்ணவும்)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தக்காளி - 2 (சிறியதாக நறுக்கவும்)

ரெட் பெப்பர் - 1 (விருப்பப்பட்டால்)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

கட் பண்ணிய பீன்ஸை கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி பின்பு குளிர்ந்த நீரில் அலசி வைத்தால் பச்சையாக இருக்கும்.

பீஃப் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி நன்றாக கழுவி வடிகட்டவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் ஃப்ரை பண்ணவும். அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

இஞ்சி பூண்டு வத்ங்கியவுடன் கரம் மசாலா, தக்காளி, பச்சை மிளகாய், சில்லி பவுடர், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். தக்காளி வதங்கியவுடன் பீஃப் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக பிரட்டி குக்கரை மூடி ஐந்து விசில் வைக்கவும்.

குக்கர் ஆவி அடங்கியவுடன் திறந்து பீன்ஸ், ரெட் பெப்பர், கொத்தமல்லி இலை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி திறக்கவும்.

இப்போது க்ரீன் பீன்ஸ் பீஃப் மசாலா ரெடி.

குறிப்புகள்:

இதனை சாஃப்ட் சப்பாத்தியுடன் பரிமாறவும். பீஃப், க்ரீன் பீன்ஸ், ரெட் பெப்பர் என்று கலர்ஃபுல்லாக இருக்கும்,