க்ரிஸ்ப்பி மஷ்ரூம்
தேவையான பொருட்கள்:
பட்டன் மஷ்ரூம்- 10
மைதா- 1 1/2மேசைக்கரண்டி
சோள மாவு (கார்ன் ஃப்ளார்)- 1 1/2 மேசைக்கரண்டி
மிளகு தூள்- 1/4 தேக்கரண்டி
ஆப்ப சோடா- 2பின்ச்
உப்பு- தேவையான அளவு
ப்ரெட் க்ரெம்ப்ஸ்- 1கப்
எண்ணெய்- பொரிக்க
செய்முறை:
மஷ்ரூமை சுத்தம் செய்து 1/2செமீ. தடிமனாக ஸ்லைஸ் செய்யவும். (ஸ்லைஸ்கள் காளானின் வடிவில் இருக்க வேண்டும்)
மாவுவகைகளுடன் மிளகு தூள், ஆப்ப சோடா, உப்பு, தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவை விட சற்று நீர்க்க கரைக்கவும்.
மஷ்ரூம் ஸ்லைஸ்களை இந்த மாவில் முக்கி ப்ரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சில்லி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
பொரிக்கு போது சற்று எண்ணெய் தெரிக்கும். ப்ரெட் தூள் எல்லா பகுதியிலும் படும் படி நன்றாக கோட் செய்யவும். Swensen's இல் சாப்பிட்டேன். ஷிட்டாக்கி மஷ்ரூமில் செய்திருந்தார்கள். ரொம்ப பிடித்து போய் வீட்டில் பட்டன் மஷ்ரூமில் ட்ரை செய்தேன். சுவையாக இருந்தது.