க்ரிஸ்பி பொட்டேடோஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 கார்ன் ஃப்ளேக்ஸ் (ரெகுலர்) - தேவையான அளவு எண்ணெய் - தேவைக்கு மைதா மாவு - அரை கப் கார்ன் மாவு - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க: வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று இஞ்சி

பூண்டு - சிறிது [விரும்பினால்]

செய்முறை:

உருளையை தோல் சீவி நீள துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக வேக வைக்கவும்.

வேக வைத்த துண்டுகளை எடுத்து நீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா

கார்ன் மாவு

உப்பு சேர்த்து கலக்கவும்.

அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைக்கவும்.

இதை மாவு கலவையுடன் சேர்த்து தேவையான நீர் விட்டு சற்று கெட்டியான மாவாக தயார் செய்யவும்.

கார்ன் ஃப்ளேக்ஸ் தேவையான அளவு எடுத்து சப்பாத்தி கட்டையால் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காயவிடவும்.

உருளை துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கரைத்த மாவில் விட்டு எடுக்கவும்.

பின் பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸில் பிரட்டி எடுத்து கையால் லேசாக பிடித்து நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

சுவையான க்ரிஸ்பி பொட்டேடோஸ் தயார். பார்ட்டிக்களுக்கு ஏற்ற ஸ்டாட்டர். பொரித்து நீண்ட நேரம் வைத்தால் மொறு மொறுப்பு போய்விடும். செய்த உடனே சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: