க்ரிஸ்பி க்ரஸான்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பஃப் பேஸ்ட்ரி - ஒரு சீட்டு முட்டை - ஒன்று நெட்டல்லா ஜாம் - ஒரு கப் பட்டர் - தேவையெனில்

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். முட்டையை சிறிது நீருடன் கலக்கி அடித்து கொள்ளவும்.

பேஸ்ட்ரி சீட் ஒன்றை எடுத்து

மைதா மாவு சிறிது தூவி

கொஞ்சம் தேய்த்துக் கொள்ளவும்.

அந்த சீட்டை சரி சமமான

நான்கு பாகமாக அறுத்துக் கொள்ளவும்.

அறுத்த ஒரு துண்டின்

இடையில் மூலைவிட்டத்தில் அறுத்துக் கொள்ளவும்.

பின் அந்த ஒரு துண்டில் ஜாமை சிறிது பெரிய பங்குள்ள இடத்தில் வைக்கவும். சுற்றியும் உள்ள மாவின் ஓரத்தில் முட்டையை தடவி விடவும்.

அதை அப்படியே சுருட்டி

முக்கோணத்தின் முனையை சுற்றி மூடி விடவும். ஜாம் வெளிவராதபடி மாவினை ஓரங்களில் அழுத்தி விட்டு மூட வேண்டும்.

ஒரு சீட்டை நான்காக வெட்டி

நான்கு துண்டுகளையும்

மீண்டும் அதை முக்கோண வடிவில் வெட்டுவதால் நமக்கு 8 துண்டுகள் கிடைக்கும். சுருட்டிய அனைத்திலும் முட்டையை நன்கு தடவவும்.

350 டிகிரியில்

முற்சூடு செய்யப்பட்ட அவனில் 20 நிமிடம் வைக்கவும்.

நன்கு பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.

பவுடர்ட் சர்க்கரையை அதன் மீது தூவி பரிமாறவும். சூடான

க்ரிஸ்பியான அலாதி சுவையுடைய க்ரஸான்ட் ரெடி

குறிப்புகள்: