க்ரின் ஆப்பிள் ரைய்தா
தேவையான பொருட்கள்:
நல்ல கெட்டியான தயிர் - 2 கப்
பெரிய பச்சை ஆப்பிள் - ஒன்று
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
புதினா இலை - கொஞ்சம்
பௌடர் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒரு (பொடியாக கட் பண்ணினது)
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக கட் பண்ணினது)
செய்முறை:
ஆப்பிளை சின்ன சின்னத் துண்டுகளாக கட் பண்ணவும்.
பின் சின்ன வெங்காயம்/பெரிய வயலட் கலர் வெங்காயம் கட் பண்ணவும்
ஒரு பௌளில் இதை எல்லாம் போட்டு தயிர், ஒரு பச்சைமிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை பொடியாக கட் பண்ணினது எல்லாம் ஒன்றாக சேர்த்து பரிமாறும் முன் உப்பு சேர்த்து பிரியாணி, ப்ரைட் ரெஸ், புலாவ் போன்றவுடன் சாப்பிடவும்.
குறிப்புகள்:
இதை அமெரிக்காவில் நிறைய நம்ம இந்தியன் இல்லங்களில் சாப்பிடக் கூடியது. அமெரிக்கர்கள் இதை ஆப்பிள் சட்னி என்று சொல்வார்கள்.
நல்ல புளிப்பான ஆப்பிள் என்றால் நன்றாக இருக்கும், நல்ல கெட்டி தயிர் அல்லது கடையில் டப்பாவில் கிடைக்கும் யோகர்ட் நல்லது. இந்தியாவில் ஆவின் கெட்டி தயிர் இதுக்கு நன்றாக இருக்கும்.