க்ரான்ப்பெரி சாஸ்( Cranberry )
தேவையான பொருட்கள்:
க்ரான்ப்பெரி - 1 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
வெல்லம் - சிறிய கட்டி
கடுகு - தாளிக்க
கறிவேப்பில்லை - 3 இலை
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் க்ரான்ப்பெரி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கி தட்டு போட்டு மூடி 5 - 6 நிமிடம் நன்றாக வேகவிடவும். (தண்ணீர் ஊற்ற தேவையில்லை).
பின்னர் அதில் வெல்லத்தினை போட்டு திரும்பவும் 1 நிமிடம் வதக்கவும்.
இதனை சிறிது நேரம் ஆறவிடவும்.
பிறகு மிக்ஸியில் இந்த கலவையை உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.(தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்)
பிறகு அதில் கடுகு மற்றும் கறிவேப்பில்லையை தாளித்து அதில் சேர்க்கவும்.
இப்பொழுது சுவையான க்ரான்ப்பெரி சாஸ் ரெடி.
குறிப்புகள்:
இதனை சமோஸா, பப்ஸ், சாட் ஐட்டம்ஸ் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.