கோவா (கபேஜ்) வெள்ளைக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மெலிதாக வெட்டிய கோவா (கபேஜ்) - 1 கப்

பச்சை மிளகாய் - 2

வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

பெரிய சீரகம் - சிறிது

கடுகு - சிறிது

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை/கறிவேப்பிலை - சிறிது

உப்பு

செய்முறை:

எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.

பின்னர் அதனுள் வெட்டிய கபேஜை சேர்த்து மூடி 2 - 3 நிமிடங்கள் அவிய விடவும்.

பின்னர் மூடியைத் திறந்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அவிய விடவும்.

தண்ணீர் ஓரளவு வற்றியதும் (நன்கு வற்ற தேவையில்லை) கொத்தமல்லி இலை/கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான கோவா வெள்ளைக்கறி தயார். இதனை சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: