கோவா வறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மெலிதாக வெட்டிய கோவா (கேபேஜ்) - ஒரு கப்

மிளகாய்த்தூள்- அரைத் தேக்கரண்டி

வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

பெரிய சீரகம்(சோம்பு) - சிறிது

கடுகு - சிறிது

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

முட்டை- ஒன்று

செய்முறை:

எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்

அதனுள் வெட்டிய கோவா (கேபேஜை) சேர்த்து மூடி (2-3) நிமிடங்கள் அவிய விடவும்

பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்வற்றும் வரை கிளறவும் (அடிப்பிடிக்க விட வேண்டாம்).

பின்னர் அதனுள் முட்டை, உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி இறக்கவும்.

சுவையான கோவா வறை தயார்.

குறிப்புகள்:

உயிர்சத்து (வைட்டமின்)- சி நிறைந்தது பாலூட்டும் தாய்மாருக்கு ஏற்படும் நோவினை மாற்ற இது உதவும். இதனை சோற்றுடன் அல்லது பாணுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.