கோல்ட் மற்றும் ஐஸ்ட் காஃபி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோல்ட் காஃபி இன்ஸ்ட்டண்ட் காஃபி பவுடர் - 1 அல்லது 2 தேக்கரண்டி சாக்லேட் சிரப் - ஒரு தேக்கரண்டி பால் - ஒரு கப் சர்க்கரை - சுவைக்கேற்ப ஐஸ் க்யூப்ஸ் - 4 அல்லது 5 ஐஸ்ட் காஃபி: டிகாஷன் - ஒரு கப் டிகாஷன் - ஒரு கப் பவுடர்ட் சுகர் - சுவைக்கேற்ப பால் - கால் கப்

செய்முறை:

கோல்ட் காஃபி தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். இன்ஸ்ட்டண்ட் காஃபி தூளுடன் சிறிது வெந்நீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

கண்ணாடி டம்ப்ளரின் ஓரத்தில் சாக்லேட் சிரப் ஊற்றி காய விடவும்.

ப்ளென்டரில் ஐஸ் க்யூப்ஸ் எடுத்துக் கொண்டு அதனுடன் காஃபி தூள் கலவையை ஊற்றவும்.

இதனுடன் தேவையான பால் மற்றும் சர்க்கரை சேர்த்து

நுரை பொங்க நன்கு அடித்துக் கொள்ளவும். விரும்பினால் இதனுடன் சிறிதளவு க்ரீம் அல்லது (வெனிலா ஃப்ளேவர்) ஐஸ்க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை சாக்லேட் சிரப் ஊற்றியுள்ள கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.

மேலே சிறிது இன்ஸ்ட்டண்ட் காஃபி தூள் தூவி பரிமாறலாம். சுவையான கோல்ட் காஃபி(Cold Coffee) தயார்.

ஐஸ்ட் காஃபி இதற்கு ஃபில்டர் அல்லது காஃபி மேக்கரில் தயாரித்த டிகாஷன் நன்றாக இருக்கும். முதல் நாளே டிகாஷனுடன் சிறிது பவுடர்ட் சுகர் சேர்த்து

ஆறியதும் ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடவும்.

அடுத்த நாள்

ஃபில்டர் காஃபியில் டிகாஷன் தயாரித்து கொண்டு

ஆறியதும் 4 அல்லது 5 மணி ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். ஒரு கண்ணாடி டம்ப்ளரில் தயாரித்து வைத்துள்ள காஃபி ஐஸ் க்யூப்ஸ் எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு டிகாஷன் ஊற்றவும்.

இதனுடன் மிக குறைவான அளவு பால் அல்லது க்ரீம் சேர்க்கவும். தேவையான அளவு பவுடர்ட் சுகர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சுவையான ஐஸ்ட் காஃபி(Iced Coffee) தயார். இதில் வெறும் ஐஸ் க்யூப்ஸ் போட்டால் சிறிது நேரத்தில் ஐஸ் கரைந்து காஃபியின் சுவை குறைந்துவிடும் என்பதால் இதில் காஃபி ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கிறோம். நீண்ட நேரம் வைத்து பருகும் போதும் ஐஸ் க்யூப்ஸ் கரைந்தாலும் காஃபியின் சுவை அப்படியே இருக்கும்.

குறிப்புகள்: