கோல்டன் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - ஒரு கிலோ

எலுமிச்சம்பழம்(தேசிக்காய்) - 2

தக்காளி - 3

பால் - 2 கப்

எண்ணெய் - தேவையானளவு

இஞ்சி - ஒரு துண்டு

உள்ளி(பூண்டு) - 6 பல்

முட்டை - 3

கார்ன் ப்ளார் - 2 மேசைக்கரண்டி

பட்டர் - 2 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து விரும்பியளவில் வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இஞ்சி, உள்ளி(பூண்டு) அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

கோழி உள்ள பாத்திரத்தில் அரைத்த (இஞ்சி,உள்ளி (பூண்டு))விழுது, உப்பு, தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழசாறு) ஆகியவற்றை போடவும்.

அதன் பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

இதை ஒரு மணித்தியாலம் ஊறவைக்கவும். (கோழித்துண்டுகள் பெரிய அளவில் இருத்தால் முள்ளுகரண்டியால் கொஞ்சம் குத்தி விடவும்).

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து வைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தக்காளிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதை சூடாக்கவும் அது சூடானதும் அதில் பட்டரை போடவும். அது உருகிய பின்பு அதில் கார்ன் ப்ளார்ரை போடவும். அது லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.

அதன் பின்பு அதனுடன் பாலை சேர்த்து தடிப்பாக வரும் வரை கிளறவும். பின்பு இக்கலவைய அடுப்பிலிருந்து இறக்கி இதை ஆறவிடவும்.

முட்டை மஞ்சள்கரு, உப்பு, மிளகுத்தூள், மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி அதை ஆறிய கலவையுடன் சேர்க்கவும்.

இவையாவற்றையும் கோழித்துண்டுகளுடன் சேர்த்து பிரட்டவும்.

இன்னொருபாத்திரத்தில் முட்டை வெள்ளைகருவை நன்றாக அடித்து அதில் கலவையாவும் பிரட்டிய கோழித்துண்டுகளை ஒவ்வொன்றாக நனைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதை சூடாக்கவும். அது சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் முட்டை வெள்ளைகரு பிரட்டிய கோழித்துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

அதன் பின்பு இதை ஒரு கண்ணாடித்தட்டில் அடுக்கி வெட்டிய தக்காளித் துண்டுகளை அதன் மேலே பரப்பி அதை மேலே முட்டை வெள்ளை கருவை ஊற்றி அதை மைக்ரோவேவ் அவனில் வைத்து (10 - 15) நிமிடங்கள் பேக் பண்ணவும்.

அதன் பின்பு அதை எடுத்து கொத்தமல்லி இலை நறுக்கி போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கோல்டன் சிக்கன் மிக மிக சுவையானதும் சத்துக்கள் உடையதுமாகும்.

எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்