கோலர்ட்டு கீரீன்ஸ் முட்டை பொரியல் (Collard Greens)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோலர்ட்டு க்ரீன்ஸ் - 1 கட்டு

முட்டை - 3

வெங்காயம் - 1

பூண்டு - 3 பல்

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கீரையை சுத்தம் செய்து கழுவிய பிறகு பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.

அதன் பின் பூண்டினை போட்டு வதக்கவும். இப்பொழுது வெங்காயம் அத்துடன் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கோலர்ட்டு க்ரீன்ஸை சிறிது உப்பு சேர்த்து கிளறி தட்டு போட்டு மூடி 10 நிமிடம் வேகவிடவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்).

அதன்பின் முட்டையை அடித்து வைத்து கொள்ளவும்.

கீரை வதங்கிய பிறகு முட்டையை அத்துடன் சேர்த்து கிளறவும்.

பின்னர் 2- 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது சுவையான கோலர்ட்டு க்ரீன்ஸ் முட்டை பொரியல் ரெடி.

குறிப்புகள்:

கோலர்ட்டு க்ரீன்ஸ் என்பது ஒரு வகை கீரை