கோதுமை சோறு (அரேபியர்கள் ஸ்டைல்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை - 2 கப் (ரைஸ் குக்கர் கப்)

சிகப்பு குடைமிளகாய் - ஒன்று

சிக்கன் ஸ்டாக் க்யூப்(மேகி க்யூப்) - ஒன்று

பூண்டு - 6 பல் (துருவிக் கொள்ளவும்)

ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

ரெட் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி(இதற்கு ஹரிசா என்று சொல்லப்படும் அரேபிய மிளகாய் சாஸ் நல்லா இருக்கும்)

உப்பு - தேவைப்பட்டால்

தக்காளி பேஸ்ட் - அரை தேக்கரண்டி

செய்முறை:

முதலில் கோதுமையை கழுவி அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பூண்டை துருவிக்கொள்ளவும். மிளகாயை பொடிதாக நறுக்கவும். ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானது பூண்டை போடவும். பூண்டு கலர் மாறும் தருவாயில் குடைமிளகாயைப் போட்டு வதக்கவும்.

பிறகு அதில் சில்லி சாஸ், தக்காளி பேஸ்ட் போட்டு கிளறி அதில் கோதுமை அளந்த அதே கப்பில் 3 கப் தண்ணீரை அளந்து ஊற்றவும்.

பிறகு சிக்கன் க்யூபை நசித்து போடவும் மூடி வைக்கவும். கொதி வரும் சமயம் ஊறிய கோதுமையை வடிகட்டி அதில் போட்டு கிளறவும். (உப்பு சரி பார்க்கவும்) சிக்கன் க்யூபில் உப்பு இருப்பதால் உப்பின் அளவை சரி பார்த்து சேர்க்கவும். சிறிது நேரத்தில் கெட்டியாகி வரும் சமயம் தீயை குறைத்து மூடி புழுங்க விடவும்.

அடிப்பிடிக்காதவாறு அடிக்கடி கிளறிவிடவும். கோதுமை வெந்ததை சரிபார்த்து இறக்கவும். சுவையான கோதுமை சோறு தயார்.

குறிப்புகள்:

இது அரேபிய ரெஸ்டாரெண்டில் பிரசித்தமான கோதுமை சோறு எல்லோருக்கும் விருப்பமானது, நான் பல முறை முயற்சித்து இப்பொழுது ரெஸ்டாரெண்டில் கிடைக்கும். அதே சுவையுடன்! இதற்கு க்ரில் செய்யப்பட்ட இறைச்சியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.