கோகனட் மக்ரூன்ஸ்
தேவையான பொருட்கள்:
கன்டென்ஸ்ட் மில்க் (condensed milk) - 400 கிராம் தேசிகேடட் கோகனட் (desiccated coconut) - 400 கிராம் முட்டை - ஒன்று வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி மைதா மாவு - அரை கப் பார்ச்மன்ட் பேப்பர்
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து வெள்ளை கருவை தனியாக எடுத்து எசன்ஸ் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். அப்படி அடிப்பதனால் மக்ரூன்ஸ் நன்கு சாஃப்டாக வரும்.
இதனுடன் மைதா மாவு சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கிளறவும். மைதா சேர்ப்பதால் கொஞ்சம் கெட்டியாக வரும்.
பிறகு கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும். மாவு கிளறிய பின் இந்த பதத்தில் இருக்கும்.
அவனை 325 F முற்சூடு செய்யவும். ஒரு பேக்கிங் ட்ரேவில் பார்ச்மன்ட் பேப்பர் போடவும். கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும். 15-20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். சுவையான கோகனட் மக்ரூன்ஸ் ரெடி.