கொய்யாப்பழத் துவையல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொய்யாப்பழம்(முற்றிய விதைகளற்ற) - ஒரு கப்

பச்சைமிளகாய் - 4

இஞ்சி - சிறு துண்டு

வெங்காயம் - அரைப்பாகம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய்ப்பூ - 2 கப்

தக்காளிப்பழம் - அரைப்பாகம்

கடுகு - கால் தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

தேசிக்காய்சாறு(லெமன் ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தேவையானளவு

செய்முறை:

கொய்யாப்பழம், பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம்(கால்பாதி), உப்பு, தேங்காய்ப்பூ, தக்காளிப்பழம் இவை எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும்.

பின்பு ஒரு வாணலியில்(தாச்சியில்)எண்ணெய் விட்டு அது கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம் (கால்பாதி)போட்டு தாளிக்கவும்.

அரைத்தவைகளுடன், கறிவேப்பிலை, தேசிக்காய்சாறு தாளித்தவைகளையும் சேர்த்து கலக்கவும். அதன் பின்பு பரிமாறவும்.

குறிப்புகள்:

உயிர்சத்து சி நிறைந்த துவையல். கொய்யாப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். இதை சோறு, பாண், இடியப்பம், தோசை, இட்லி இவையாவற்றுடனும் (விருப்பத்திற்கேற்ப) சாப்பிடலாம். (சூடான உணவுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்).