கொய்யாக்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
கொய்யாக்காய் - 2
மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
லெமன் உப்பு - ஒரு தேக்கரண்டி
தேசிக்காய் (எலுமிச்சை) சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கொய்யாக்காயை அவித்து, அதனை ஈரம் இல்லாமல் துடைத்து பின்பு சிறு துண்டுகளாக வெட்டவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சி(வாணலி) வைத்து அதில் அரைத் தேக்கரண்டி எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகை போட்டு தாளிக்கவும்.
அதன் பின்பு அவித்து வெட்டிய கொய்யாக்காய், உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய், கடுகு, லெமன்உப்பு, தேசிக்காய்(எலுமிச்சை)சாறு இவையாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
இதோ சுவையான கொய்யாக்காய் ஊறுகாய் தயாராகிவிட்டது. அதன் பின்பு இதனை பரிமாறலாம்.
குறிப்புகள்:
கொய்யாக்காய் ஊறுகாயில் வைட்டமின் (A,B1,B2,B3,C),கால்சியம், மினரல், பொட்டாசியம், மெக்னீஸியம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்கள் இவையாவும் நிறைந்து காணப்படும். எச்சரிக்கை - கொய்யாக்காய் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - கொய்யாக்காயை அவித்து, அதனை ஈரம் இல்லாமல் துடைத்து பின்பு சிறு துண்டுகளாக வெட்டவும்