கொத்தமல்லி இலை ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலை - ஒரு கட்டு

தக்காளி - 2

காய்ந்த மிளகாய் -4

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

புளி - சிறிய எலுமிச்சை அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - சிறிதளவு

கறிவேப்பிலை - 1 நெட்டு

செய்முறை:

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைக்கவும்.

புளியை ஒரு டம்ளர் நீரில் கரைத்து வைக்கவும்.

மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்தமிளகாய் 2 சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.

தக்காளியை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் காய்ந்தமிளகாயை கிள்ளிப்போடவும். கறிவேப்பிலையையும் போடவும். பின்பு கொத்தமல்லி இலையைப் போட்டு வதக்கவும். இலை வதங்கி வரும் பொழுது மஞ்சள் சேர்க்கவும்.

ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு போடவும்.

தண்ணீர் கொதித்து வரும்பொழுது புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

புளிக்கரைசல் கொதித்து வரும்போது அரைத்து வைத்த விழுதினைச் சேர்க்கவும்.

அது கொதித்து வரும் பொழுது தக்காளிக் கரைசலைச் சேர்க்கவும்.

ஒரு கொதிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்

சுவையான கொத்தமல்லி ரசம் தயார்.

குறிப்புகள்: