குவாக்கமொலே (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவகாடோ - 3

எலுமிச்சை - 5 tsp

கல் உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - 1/2 tsp

சீராக தூள் - 1/2 tsp

வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 cup

தக்காளி பொடியாக நறுக்கியது - 2 cup (விதை சேர்க்க கூடாது)

கொத்தமல்லி இலை - 1 tbsp

பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

அவகாடோவை பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு ஸ்கூப் செய்து வைக்கவும்.

பாதி எலுமிச்சை சாறு சேர்த்து முதலில் பிசையவும்.

உப்பு, மிளகாய் தூள் மற்றும் சீராக தூள் சேர்த்து பிசையவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும் (ரொம்பவும் பிசைந்து விட கூடாது).

கடைசியாக மீதம் உள்ள எலுமிச்சை சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு பரிமாறவும்.

குறிப்புகள்:

இது டார்டியா சிப்ஸ்,ஃபலாஃபல் மற்ற எல்ல மெக்சிகன் உணவுகளுக்கும் பொருந்தும்.