குலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்மோக்டு டூனா மீன் - ஒரு துண்டு வெங்காயம் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது கிதியோ மிருஸ் - ஒன்று எலுமிச்சை - ஒன்று இஞ்சி - ஒரு துண்டு உப்பு மஞ்சள் தூள் - சிறிது எண்ணெய் - சிறிது தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி அரிசி மாவு - ஒரு கப் வேக வைத்த உருளைக்கிழங்கு - பாதி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து பொடிக்கவும்.

மீனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்

உப்பு

மஞ்சள் தூள் சேர்த்து பிசையவும்.

பொடியாக நறுக்கிய கிதியோ மிருஸ்

கறிவேப்பிலை

இஞ்சி

எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து கொள்ளவும்.

பின் தேங்காய் துருவல் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசித்து பிசையவும். (உருளை அவசியம் இல்லை. ஆனால்

சேர்த்தால் உருட்ட வசதியாக இருக்கும். அரிசி மாவில் வைக்கும் போது விட்டு போகாமல் இருக்கும்).

பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அரிசி மாவில் உப்பு கலந்து நீரை சிறிது சிறிதாக தெளித்து பிசையவும். மாவை அழுத்தி பிசைந்து கையால் பிடித்தால் உருண்டையாக பிடிக்க வரும் பதத்திற்கு பிசைய வேண்டும்.

கொழுக்கட்டைக்கு செய்வது போல் மாவை தட்டி உள்ளே மீன் கலவை உருண்டையை வைத்து மூடவும்.

மீண்டும் உருட்டி பிடித்து கொள்ளவும். எங்காவது இடைவெளி இருந்தால் சிறிது அரிசி மாவை வைத்து மூடினால் சேர்ந்து கொள்ளும்.

இது போல் உருண்டைகளை தயார் செய்து

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

சுவையான குலா தயார்.

குறிப்புகள்: