குரக்கன் புட்டு பிரட்டல் (ராகி புட்டு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குரக்கன் மா - 21/2 கப்

தேங்காய்ப்பூ - 1/4 கப்

உப்பு

சுடு தண்ணீர்

பிரட்டலுக்கு:

சிறிதாக வெட்டிய காலிஃப்ளவர் - 1/2 கப்

சிறிதாக வெட்டிய புரோக்லி(Broccoli) - 1/2 கப்

தக்காளி - 1 பெரியது

வெங்காயம் - 1 பெரியது

துருவிய கரட் - 1/2 கப்

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

செத்தல் மிளகாய் - 3

உப்பு

கடுகு

பெரிய சீரகம்

கறிவேப்பிலை

கராம்பு - 4

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டவும்.

வெங்காயத்தை நீளமான துண்டுகளாக வெட்டவும்.

சிறிதாக வெட்டிய காலிஃப்ளவர், என்பவற்றை சிறிது உப்பு போட்டு கலந்து மூடி மைக்ரோவேவில் 4 நிமிடங்களுக்கு அவித்து எடுக்கவும். (தண்ணீர் விட தேவை இல்லை)(அல்லது ஆவியில் வைத்து அவித்து எடுக்கவும்)

குரக்கன் மாவினுள் உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

மாவுக்கலவை கொழுக்கட்டை பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு தட்டில் கொட்டி (உ+ம்: பேக்கிங் தட்டு) ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும்.

இதனுடன் தேங்காய்ப்பூவை கலந்து ஆவியில் அவித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய விட்டு சூடானதும் அதனுள் வெட்டிய வெங்காயம், கரட், செத்தல் மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெட்டிய தக்காளி, அவித்த காலிஃப்ளவர், புரோக்லி, மிளகாய்தூள், கராம்பு, உப்பு என்பவற்றை போட்டு வதக்கவும்.

கலவை நன்கு வதங்கியதும் (அடுப்பின் தீயைக் குறைத்து விட்டு) அதனுள் அவித்து வைத்த புட்டினைக் கொட்டி பிரட்டவும்.

சுவையான குரக்கன் புட்டு பிரட்டல் தயார். இதற்கு பக்க உணவு எதுவும் தேவை இல்லை.

குறிப்புகள்:

நீரிழிவு(டயாபட்டீஸ்) நோயாளருக்கும், டயட்டில் உள்ளவர்களிற்கும் ஏற்ற சத்தான உணவு.