குட்டி பன் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
குட்டி பன் - பத்து (உள்ளங்கை அளவு)
முட்டை கலக்க:
முட்டை - இரண்டு
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
கீமா சுருட்ட:
கீமா - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
புதினா சட்னிக்கு:
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - அரை துண்டு சிறியது
உப்பு - ஒரு பின்ச்
லெமென் ஜூஸ் - கால் தேக்கரண்டி
பட்டர் - 2 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் புதினாவை மண் இல்லாமல் அலசி வைத்து கொள்ளவும். அதில் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து லெமென் ஜூஸ் உற்றி கலக்கி வைக்கவும்.
கீமாவை நன்கு கழுவி வடித்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சுருட்டவும்.
முட்டையில் மிளகு தூள், உப்பு போட்டு நன்கு அடித்து கலக்கி, சுருட்டிய கீமாவையும் போட்டு நன்கு கலக்கி குட்டி குட்டி முட்டைகளாக ஐந்து வருவதுபோல் பட்டர் ஊற்றி பொரித்தெடுக்கவும்.
இப்போது பன்னை இரண்டாக வெட்டி இரண்டு பக்கமும் புதினா சட்னியை தடவி பொரித்தெடுத்த குட்டி முட்டைகளை நடுவில் வைத்து மூடவும்.
முட்டை வித் கீமா குட்டி பன் சாண்விட்ச் ரெடி
குறிப்புகள்:
ஈஸியான குழந்தைகளுக்கு சத்தானாதொரு காலை உணவு.
பெரியவர்களும் சாப்பிடலாம். ஆனால் காரத்தை கொஞ்சம் கூட்டி கொள்ளவும்.