கீஷ் (Quiche)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிக்க: மைதா மாவு - 3 கப் வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி பால் - கால் கப் பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி சீனி - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு தேக்கரண்டி வேக வைக்க: எலும்பில்லாத கோழி - 150 கிராம் இஞ்சி

பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று கேரட்

பச்சை பட்டாணி

குடை மிளகாய் - அரை கப் ப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி துருவிய சீஸ் - 75 கிராம் முட்டை - 3 மல்லித் தழை - சிறிது

செய்முறை:

மைதா மாவுடன் வெண்ணெயை உருக்கி ஊற்றி

பேக்கிங் பவுடர்

பேக்கிங் சோடா

பால் மற்றும் சீனி சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கோழி

இஞ்சி

பூண்டு விழுது

கரம் மசாலா தூள்

மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்

பச்சை மிளகாய்

கேரட்

பச்சை பட்டாணி

குடை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வதக்கி

கோழிக் கலவையில் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி துருவிய சீஸ் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை உருட்டி சப்பாத்தி போல் தயார் செய்து

வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைத்து 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 5 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

அதன்மேல் கோழிக் கலவையை பரவலாக ஊற்றி 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

சுவையான கீஷ் ரெடி.

சூடாகத் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: