கீமா ஸ்டப்டு சப்பாத்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா- 100 கிராம்

கோதுமை மாவு- 1 கப்

இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்

வெங்காயம்-1

பொரித்த வெங்காயம்-2

உப்பு-தேவைக்கு

மிளகாய் தூள்- அரை ஸ்பூன்

தனியா தூள்-1 ஸ்பூன்

மிளகு தூள்- கால்ஸ்பூன்

கடலை மாவு- தேவைக்கு

பச்சை ஏலக்காய்,ஜாதிபத்திரி தூள்- சிறிதளவு

எண்ணெய்- கைமா தாளிக்க, சப்பாத்தி சுட தேவைக்கு

சோடா உப்பு-சிறிதளவு

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு,சோடா உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து பினைந்து காற்று புகாத டப்பாவில் 1 மணி நேரம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாய் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் கீமாவை சேர்க்கவும்

சுருண்டு வந்ததும் உப்பு,தனியாதூள்,மிளகாய்தூள்,மிளகுதூள், ஏலக்காய் ஜாதிபத்திரி தூளை சேர்த்து மசாலா வாசம் நீங்க கிளறவும்.

நீர் தெளித்து மூடிவிட்டு வேகவிடவும். கீமா வெந்ததும் கொத்தமல்லி,ப்ரைட் வெங்காயம் சேர்த்து கிளறவும்.

கெட்டியாக ஆகும் பதம் வரும் அளவுக்கு சிறிது சிறிதாக கடலைமாவு சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வந்த பிறகு இறக்கவும்

சப்பாத்தி மாவை திரட்டி நடுவில் கீமா பூரணத்தை வைத்து மூடி மீண்டும் திரட்டி வைக்கவும்

தோசைகல்லில் நெய் அல்லது எண்ணெய் தடவி சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்

குறிப்புகள்:

தனியாக தொட்டுகொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் க்ரீன் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்