கீன்வா (Quinoa) கீரைச்சாறு
தேவையான பொருட்கள்:
கீன்வா (Quinoa) - 1/2 கப்
ஸ்பினாச் - 2 கப்
பைத்தம்பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1 மீடியம் சைஸ்
பூண்டு - 4 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1 சிட்டிகை
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை கழுவி, தண்ணீரை வடித்துவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி தோலுரித்து வைக்கவும். பாசிப்பருப்பை கழுவி, தண்ணீரில் ஒரு 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கீன்வாவை நன்கு கழுவி, 1:2 என்ற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேகவைக்கவும். ஸ்டீம் அடங்கியதும், குக்கரைத் திறந்து, மெதுவாக கீன்வாவை ரொம்பவும் மசித்துவிடாமல், மிருதுவாக கிளறி விடவும்.
ப்ரஷர் குக்கர்/பேனில், 1/2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு, காய்ந்ததும், சீரகம் போடவும். அது பொரிந்ததும், தட்டி வைத்த பூண்டு பற்களைபோட்டு, சிறிது வறுப்பட்டதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி, சற்று நிறம் மாறியதும், மிளகுத்தூள், மஞ்சள்தூளையும் போட்டு, இரண்டு நிமிடம் வதக்கி, கூடவே அரிந்து வைத்த கீரை, பாசிப்பருப்பு, தேவையான உப்பு சேர்த்து, 4 கப் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வேகவிடவும்.
கீரைச்சாறு பரிமாற, ஒரு சூப் பவுலில் இரண்டு/மூன்று கரண்டி கீரைச்சாறைவிட்டு, கூடவே ஒரு பெரியக்கரண்டி கீன்வா சேர்த்து, கலந்து பரிமாற சுவையான, சத்தான கீன்வா கீரைச்சாறு தயார்!
இது நல்லதொரு சுவையான சூப்/ஸ்டூ(Stew)வாக இருக்கும். டயட் இருப்பவர்களுக்கும், சத்தான, ஃபில்லிங்கான உணவாகும்.