கிவி பழரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கிவிபழங்கள் (பழுத்தது) - 6

சீனி (சர்க்கரை) - தேவையான அளவு

தண்ணீர் - ஒரு கப்

பால் - 3 கப்

வெனிலா - ஒரு தேக்கரண்டி

ஐஸ்கட்டி - ஒரு கப்

கயூ - 25 கிராம்

பிளம்ஸ் - 25 கிராம்

செய்முறை:

கிவி பழங்களை எடுத்து தோலைச்சீவி இரண்டாக வெட்டவும்.

அதன் பின்பு கிவி பழங்கள், சீனி, தண்ணீர், பால், வெனிலா இவையாவற்றையும் மிக்ஸியில்(கிரைண்டரில்) போட்டு நன்றாக அடிக்கவும்.

கிவி பழரசம் தயாராகிவிட்டது. அதன் பின்பு இந்த பழரசத்தை அழகான பூக்கள், பழங்கள், வர்ணங்கள் போட்ட கிளாஸில் (கப், குவளை) ஊற்றி அதன் மேல் கயூ, பிளம்ஸ், ஐஸ் கட்டி சேர்த்து அலங்கரித்து பரிமாறுங்கள்.

குறிப்புகள்:

கிவி பழரசம் கண்களுக்கு குளிர்ச்சியை தருவதும், உயிர்சத்து சி நிறைந்ததும் சுவையானதும் குழந்தைகளுக்கு விருப்பமானதும் இலகுவாக செய்ய கூடியதுமானதும் ஆகும். எச்சரிக்கை - கிவிப்பழ அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - கிவிப்பழங்கள்(பழுத்தது)