கிறீம் சீஸ் ஸ்பிரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய சீஸ் - 1கப்

பட்டர் - 3 மேசைக்கரண்டி

பால் - 1/2 கப்

(whole milk)

செய்முறை:

பாலை நன்கு வற்றக் காய்ச்சவும். (1/4 கப் ஆகும் வரை)

பின்னர் அதனுள் துருவிய சீஸ், பட்டர் என்பவற்றை போட்டு விடாமல் கிளறவும்.

சீஸ் உருகியவுடன் இறக்கி ஒரு மர அகப்பையால் நன்கு அடிக்கவும்.

ஆறியதும் ஒரு சுத்தமான போத்தலில் போட்டு மூடி குளிரூட்டியில் வைத்து தேவையான போது எடுத்து பயன்படுத்தலாம்.

குறிப்புகள்:

சீஸ் உருகினால் போதும். கொதிக்க விட வேண்டாம்.