கிரேப்ஸ் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
கிரேப்ஸ் (திராட்சைப்பழம்) - 200 கிராம்
சீனி - 200 கிராம்
சித்திரிக்கமிலம் - 25 கிராம்
தண்ணீர் - 3 டம்ளர்
செய்முறை:
கிரேப்ஸை(திராட்சைப்பழத்தை) கழுவி ஒரு பாத்திரத்திலிடவும். அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அவியவிடவும்.
பழங்கள் நன்றாக அவிந்ததும் அதை நன்றாக கடையவும். கடைந்தபின் ஓகன்றி துணியில் ஊற்றி பிழிந்து சாறை மட்டும் எடுக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சீனியை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சவும்.
சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக கரைந்து பாகு நன்றாக கொதிக்க தொடங்கியதும் கிரேப்ஸ் ஜுஸை (திராட்சை சாற்றை) கலந்து நன்றாக காய்ச்சவும்.
நன்றாக காய்ச்சியதும் அந்த பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
பாகு ஓரளவு ஆறியதும் அதனுடன் சித்திரிக்கமிலம் இட்டு நன்றாக கலந்து ஆற விடவும்.
ஆறியதும் தொற்று நீக்கிய போத்தல்களில் அடைத்து தேவையான போது அளவாக எடுத்து தண்ணீர், ஐஸ் கட்டி ஆகியவற்றை கலந்து அழகிய கிளாஸ்களில் ஊற்றி பரிமாறவும்.
குறிப்புகள்:
கிரேப்ஸ் ஜுஸ் மிக மிக சுவையானதும் வைட்டமின், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் அடங்கியதும் அத்துடன் கூடிய நாட்கள் வைத்து பாவிக்க கூடியதுமாகும். எச்சரிக்கை - கிரேப்ஸ்(திராட்சைப்பழ)அலர்ஜி உள்ளவர்களும், சர்க்கரை நோயாளர்களும் வைத்தியரின் ஆலோசனைப்படி பருகவும். மாற்று முறை - கிரேப்ஸை (திராட்சைப்பழத்தை) அவிக்காமல் கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு அடித்து சாறு எடுத்தும் செய்யலாம்,(ஓகன்றி துணியில் ஊற்றி பிழிந்து சாறை மட்டும் எடுக்கவும்).