கிரில்ட் சோளம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோளன் பொத்தி - 2

மிளகாய்த்தூள்- சிறிது

உப்பு - சிறிது

செய்முறை:

சோளத்தை மேல் பட்டை உரித்து நன்கு கழுவி சுத்தப்படுத்தவும்.

பின் உப்பு மிளகாய்தூளை அதன் மேல் சீராக பூசவும்.

அடுபின் மேல் (ஹொட் பிளேட்) ஒரு அலுமினியம் பாயிலை விரித்து அதன் மேல் சோளனை வைத்து மிதமான தீயில் திருப்பி திருப்பி (சுழற்றி) வாட்டவும்.

சுவையான கிரில்ட் சோளன் தயார். இதனை மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

குறிப்புகள்:

இதற்கு அதிகம் முற்றாததும் அதிகம் பிஞ்சுமில்லாத சோளன் நன்றாக இருக்கும். அதிகம் முற்றியது என்றால் தண்ணீரில் உப்பு சேர்த்து அவித்து உண்ணலாம். சோளனை முறிக்காமல் அப்படியே முழுதாகவும் சுட்டு எடுக்கலாம்.