கிம்பாப் ரைஸ் ரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரோஸ்டட் லேவர் கிம் - ஒன்று கேரட் - ஒன்று வெள்ளரி - ஒன்று முட்டை - ஒன்று கிம்பாப் முள்ளங்கி - ஒன்று சாதம் - 2 கைப்பிடி மிளகுதூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைக்கு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கேரட்

வெள்ளரியை கழுவி விட்டு படத்தில் காட்டியுள்ளது போல் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து ஆம்லெட் செய்துக் கொண்டு அதையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஆம்லெட் செய்ய வெங்காயம்

மிளகாய் எதுவும் சேர்க்க தேவையில்லை ப்ளையின் ஆம்லெட்டாக இருக்க வேண்டும்.

சாதத்துடன் மிளகுதூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

அதன் பிறகு கிம்மை வைத்து அதன் மேல் சாதத்தை மிகவும் மெல்லியதாக பரப்பி விடவும். கிம்மின் முக்கால் பகுதி வரை சாதத்தை பரப்பி விடவும்.

சாதத்தின் மேல் நறுக்கி வைத்திருக்கும் கேரட்

வெள்ளரி

முட்டை

முள்ளங்கி ஆகியவற்றை அடுக்கி வைக்கவும்.

கிம்மை அதன் உள்ளே வைத்திருக்கும் சாதம்

காய்கள்

முட்டை ஆகியவற்றுடன் சேர்த்து சிறிதளவு அழுத்தம் கொடுத்து சுருட்டவும்.

சுருட்டி வைத்திருக்கும் கிம்மை அதன் குறுக்கில் நறுக்கி துண்டுகளாக்கவும்.

சுவையான கிம்பாப் தயார். இங்கே காட்டியுள்ளது ஒரு கிம்முக்கு மட்டுமே

விருப்பத்திற்கு ஏற்றவாறு கிம்மின் எண்ணிக்கையை அதிகரித்து வைத்தும் செய்யலாம்.

குறிப்புகள்: