கிட்ஸ் ப்பியாஸ்டா பொட்டெடோ( Kids Fiesta potato)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பூண்டு - 2 பல்
பட்டர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கடைசியில் பரிமாறும் பொழுது சேர்க்க வேண்டியவை:
செட்டார் சீஸ் ( Cheddar cheese) - 2 மேசைக்கரண்டி
கெட்டியான தயிர் - 1 மேசைக் கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
அவனை 450 F முற்சூடு செய்யவும்.
முதலில் உருளைக்கிழங்கினை நன்றாக கழுவி 1 இன்ச் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை காரட் துருவது போல துருவி வைக்கவும்.
பிறகு ஒரு நாண் ஸ்டிக் கடாயில் பட்டரினை போட்டு அத்துடன் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கினை , துருவிய பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக 5 - 6 நிமிடம் வதக்கவும்.
பிறகு வதக்கிய உருளைக்கிழங்கினை அவனில் வைக்கும் ட்ரெயில் கொட்டி அவனில் 10 - 15 நிமிடம் 450 F யில் வைக்கவும்.
இப்பொழுது மிகவும் க்ரிஸ்பியாக உருளைக்கிழங்கு இருக்கும்.
செட்டார் சீஸினை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்து உருகி கொள்ளவும்.
இப்பொழுது பரிமாறும் தட்டில் முதலில் உருளைக்கிழங்கினை போடவும்.
அதன் மேல் உருகிய சீஸினை ஊற்றி அதன் மேல் தயிர் மற்றும் வெங்காயத்தாளினை சேர்த்து பரிமாறவும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்புகள்:
மிகவும் அருமையான ஸ்நாக்.
தயிருக்கு பதிலாக சோர் க்ரீமை(Sour Cream) சேர்க்கலாம் அவன் இல்லதவார்கள் கடாயிலேயே மேலும் 2 மேசைக் கரண்டி பட்டரினை சேர்த்து 15 - 20 நிமிடம் மிதமான தீயில் வதக்கி வறுக்கவும்.