கிட்ஸ் பனானா மஃபின்
தேவையான பொருட்கள்:
மைதாமாவு – 2 கப் (250 கிராம்)
சர்க்கரை - 1 1/4 கப் (150 கிராம்)
கனிந்த வாழைப்பழம் – 3
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பால் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை - ஒன்று (பெரியது)
வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால் மட்டும்)
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் மைதாமாவை சலித்துக்கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். பின் வெண்ணெயை சர்க்கரையுடன் நன்றாக பீட்டரால் அடித்துக்கொள்ளவும். அதனுடன் முட்டையை ஊற்றி நன்றாக அடிக்கவும். பின் வாழைப்பழக்கலவையை ஊற்றி அடிக்கவும். அதில் பால், வெனிலா எசன்ஸ் ஊற்றி கலக்கவும்.
இப்போது அவனை 350 F set செய்து முற்சூடு செய்தால் சரியாக இருக்கும்.
கடைசியாக மைதாமாவை சிறிது சிறிதாக கொட்டி மரக்கரண்டியால் ஒரே சீரான வேகத்தில் கலக்கவும். (mix and fold method)
நன்றாக கலந்தவுடன் அதை கப் மோல்டுகளில் பேக்கிங் (parchment) பேப்பர் போட்டு அது இல்லையென்றால் மோல்டுகளில் வெண்ணெய் அல்லது பேக்கிங் ஸ்பிரே தடவி கலவையை ஊற்றவும். மேற்கூறியவற்றை செய்து
முடித்தவுடன் முற்சூடு செய்த அவனில் பேகிங் ட்ரேயில் கப்களை அடுக்கி 40 நிமிடங்கள் வைத்து (மஃபின் நன்றாக வெந்து பொன்னிறமாகும் வரை)எடுக்கவும்.
குறிப்புகள்:
மஃபின்ஸ் பிடிக்காத குழந்தைகள் இல்லை. அதை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே. அதை செய்வது ஒண்ணும் சிரமமில்லை சொல்லப்போனால் மிகவும் எளிது. என்னிடம் பல வகை செய்முறைகள் கைவசம் இருந்தாலும், இது முதல் முறையாகப்போடுவதால், இதுவரை செய்ய தெரியாமலிருக்கும் தோழிகளுக்காக மிகவும் சுலபமான முறையை செய்து காட்டியிருக்கிறேன். இதன் சிறப்பு என்னவென்றால், வழக்கமாய் உபயோகிக்கும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் போன்ற கெமிக்கல்ஸ் எதுவும் இதில் போடவில்லை. செய்து சுவைத்து மகிழுங்கள்.
கவனிக்க வேண்டிய விசயங்கள் (this tips for beginners only, not for experts) மஃபின் கலவை தயாரிக்குமுன் எல்லா பொருட்களும் அறை வெப்பநிலையில் இருக்கவேண்டும். முட்டை, வெண்ணெய் போன்றவற்றை 1 மணி நேரம் முன்பாக ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து வெளியில் வைக்கவும். கலவையில் கடைசியாகத்தான் மாவை கலக்கவேண்டும். மாவு கலந்தபின் அதிகம் அடிக்க கூடாது. Stir and fold method-ல் தான் கலக்கவேண்டும். (Clockwise) ஒரே திசையில் கட்டியில்லாமல் கலக்கவும். கலவையை வைப்பதற்கு 5 நிமிடங்கள் முன் முற்சூடு செய்தால் போதும் எப்போதும் ட்ரேயை நடுவில்தான் வைக்கவண்டும் (middle rack) அவனுக்கு அவன் temperature சிறிது வித்தியாசப்படலாமென்பதால். நான் சொன்ன நேரத்தைவிட 5 நிமிடங்கள் கூடவோ / குறையவோ ஆகலாமென்பதால் கத்தியால் நடுபாகத்தில் குத்திப்பார்த்து ஒட்டாமலிருந்தால் எடுக்கவும். ஆர்வமிகுதியில் அடிக்கடி திறந்து பார்த்தால் சரியாக வராது. அதனால் ஓவனில் உள்ள light-போட்டு பார்த்தால் தெரியும் கலர் மாறியிருப்பது. வாசனையும் வரும். பொன்னிறத்திலேயே எடுக்கவும், செந்நிறமாகும்வரை விடவேண்டாம்.