கார்லிக் சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூண்டு - ஒன்று

மைதா - இரண்டு மேசைக்கரண்டி

பால் - அரை டம்ளர்

தண்ணீர் - அரை டம்ளர்

பட்டர் - இரண்டு தேக்கரண்டி

உப்பு - ஒரு பின்ச்

லெமென் ஜூஸ் - அரை தேக்கரண்டி

ஒயிட் பெப்பர் - கால் தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

முழு பூண்டை பொடியாக நறுக்கி அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும். தண்ணீரை வடித்து விட்டு அதை பாதி பட்டர் போட்டு வதக்கி அரைக்க வேண்டும்.(மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்தால் கூட வெந்துவிடும்) பிறகு மீதி பட்டரை உருக்கி மைதாவை தூவி வறுத்து பால் சேர்க்கவும். அப்படி செய்ய கஷ்டமாக இருந்தால் பாலில் மைதாவை கலந்து ஊற்றலாம். அதோடு அரைத்த பூண்டு, வெள்ளை மிளகுதூள், உப்பு, லெமென் ஜுஸ், ஆலிவ் ஆயில் ஊற்றி கலந்து சாப்பிடவும்.

பேசில் இலைகளை பொடியாக நறுக்கி போட்டு அலங்கரித்து கூட வைக்கலாம்.

குறிப்புகள்:

கார்லிக் சாஸ் ரொம்ப நல்லது உடம்புக்கு, கேஸ் டிரபுள் மற்றும் வயிறு உப்புசத்துக்கு இதை சாப்பிடலாம்.

இந்த சாஸ் செய்து வைத்து கொண்டால் சாலட், குபூஸ், க்ரில் சிக்கன் போன்றவையுடன் சேர்த்து சாப்பிடலாம். வயிறு உப்புசமாக இருந்தால் கூட இந்த சாஸ் செய்து அடிக்கடி ரொட்டி, பிரெட்டில் தடவி சாப்பிடலாம்.பூண்டு எதுக்கு வேக வைத்து வதக்கி அரைக்கனும் என்றால் அப்படி செய்யும் போது அதில் உள்ள காரதன்மை போய்விடும், பூண்டு அதிகம் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.