கஸ்டர்ட் பிஸ்கட்
தேவையான பொருட்கள்:
கோதுமை மா (மைதா) - 2 கப்
ஐஸிங் சீனி - 1கப்
பட்டர் - 2 கப் (200 கிராம்)
கஸ்டர்ட் பவுடர் - 1/2கப்
மஞ்சள் நிறம் - 2 துளி
வனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.
கோதுமை மா, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து அரிக்கவும் (சலிக்கவும்)
ஐசிங் சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.
பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு வனிலா, மஞ்சள் கலர் சேர்த்து கிளறவும்.
பின்னர் அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக குழைக்கவும். (அழுத்தமாக குழைத்தால் பிஸ்கட் கல் போல ஆகிவிடும்)
பின்னர் மாவை பிஸ்கட்/குக்கீ அச்சினுள் வைத்து பேகிங் பானில் ஒரு அங்குல இடைவெளியில் பிஸ்கட்களை இடவும்.
இதை 180 F இல் 10 - 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
குறிப்புகள்:
பிஸ்கட் அச்சு இல்லாவிட்டால் மாவை சப்பாத்தி போல தட்டி சதுரமாகவோ வட்டமாகவோ வெட்டியும் பேக் செய்யலாம். ஐஸிங் சீனி , பட்டர் சேர்த்திருப்பதால் கையால் தட்டும் போது ஒட்டும். எனவே மாவை குழைத்ததும் பிரிட்ஜில் 1 மணித்தியாலம் வைத்து பின்னர் எடுத்து தட்டலாம். ஐஸிங் சீனிக்கு பதிலாக சாதாரண சீனி பாவிக்கக் கூடாது. பேக் செய்யும் போது 10 - 15 நிமிடங்களுக்குள்ளாக எடுத்து விடவும். அதிக நேரம் வைத்தால் பிஸ்கட் எரிந்து விடும். பிஸ்கட் வெந்ததை அதன் வாசனையே காட்டி விடும். அப்போது உடனே எடுத்து விடவும்.