கஸ்டர்டு ஆப்பிள் புட்டிங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 2 கன்டண்ஸ்ட் மில்க் - அரை டின் சீனி - ஒரு மேசைக்கரண்டி பால் பவுடர் - 3 மேசைக்கரண்டி கஸ்டர்ட் பவுடர் - 4 மேசைக்கரண்டி முந்திரி - சிறிது திராட்சை - சிறிது

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

ஆப்பிளைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் போட்டு

அதனுடன் முந்திரி

திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கன்டண்ஸ்ட் மில்க்குடன்

கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

கஸ்டர்ட் கலவையை நறுக்கிய ஆப்பிளுடன் சேர்த்து

அதனுடன் பால் பவுடர் மற்றும் சீனி சேர்க்கவும்.

இந்தக் கலவையை சிறிய கிண்ணங்களில் ஊற்றி

ஆவியில் வைத்து 10- 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

கலவை வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் ஃபிரீசரில் வைத்து குளிரூட்டவும்.

சுவையான கஸ்டர்டு ஆப்பிள் புட்டிங் தயார். தேவையான போது எடுத்து மீண்டும் கரண்டியால் கடைந்துவிட்டு கிண்ணங்களில் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: