கவாபட் ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 5 குவளை

தக்காளி - 7

வெங்காயம் பெரியது - 2

பூண்டு - 10பல்

பச்சை மிளகாய் - 3

நெய் +எண்ணெய் - 50கிராம்

சோயாசாஸ் - 3 கரண்டி

வினிகர் - 2 கரண்டி

மிளகுத்தூள் - 1 கரண்டி

எழுமிச்சைபழம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

முட்டை - இரண்டு

மல்லிக்கீரை - ஒரு சிறிய கட்டு

செய்முறை:

அரிசியை உதிர் உதிராக வடிக்கவும். பூண்டை பொடியாக வெட்டி வைக்கவும்

தக்காளியை அரைத்து வைக்கவும் பச்சை மிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும் வெங்காயத்தை வெட்டி வைக்கவும்

சட்டியில் எண்ணெய்+நெய் ஊற்றி வெங்காயத்தை போட்டி வதக்கவும் பாதி வெந்ததும் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி மூன்று நிமிடம் கிளறி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு விதை நீக்கிய பச்சை மிளகாய் சோயா சாஸ், மிளகுத்தூள், எ.பழம், வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்கு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.

பின் அதில் சோற்றை சேர்த்து கிளறி பத்து நிமிடம் தம்மில் போடவும் கடைசியில் முட்டையை கொத்திவிட்டு பொரித்து மேலே தூவி மல்லிக்கீரையை தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

இது தாய்லாந்தில் செய்யும் ஒருவகை ரைஸ் விரும்பியவர்கள் சிறிது அஜினமேட்டோ சேர்த்துக் கொள்ளலாம்