களி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்த உளுத்தம் மா - 3 மேசைக்கரண்டி

வறுத்த சிவப்பு அரிசிமா - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை(வெல்லம்)/பனங்கட்டி - 5 மேசைக்கரண்டி

பயத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி

உப்பு - 1 சிட்டிகை

பால்/தேங்காய்ப்பால் - 1 தம்ளர்

தண்ணீர் - 1 1/2 தம்ளர்

செய்முறை:

பயத்தம் பருப்பை வெறும் சட்டியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் விட்டு அதில் அரிசிமா, உளுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.

பின்னர் வறுத்த பருப்பை போட்டு கலந்து மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் தங்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.

பருப்பு நன்கு அவிந்ததும் சர்க்கரை(வெல்லம்)/பனங்கட்டி சேர்த்து கிளறவும்.

கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் பரிமாறும் பாத்திரத்தில் போட்டு பரிமாறவும். சுவையான சத்தான களி தயார்.

குறிப்புகள்:

விரும்பினால் 3 ஏலக்கயை குற்றியும் போடலாம் வாசமாக இருக்கும். ஆனால் வெறுமே செய்தால் உளுந்து மணம் மிகவும் நன்றாக இருக்கும். தேங்காய்ப்பால் விட்டு பனங்கட்டி சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். எனது அம்மம்மா அப்படித்தான் செய்வார்கள். மிகவும் நன்றாக இருக்கும்.