கறி பணிஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமைமா (மைதாமா) - ஒரு கிலோ

உப்பு - தேவையான அளவு

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

ஆப்பச்சோடா(Baking powder) - (1- 3) தேக்கரண்டி

அல்லது ஈஸ்ட் - கால் பாக்கெட்

முட்டை - (1- 3)

பால் (நகச்சூடுள்ள ) - தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா), ஆப்பச்சோடா(Baking powder)அல்லது ஈஸ்ட், பட்டர், உப்பு, ஒரு முட்டை ஆகியவற்றை போடவும.

பின்பு நகச்சூடுள்ள பாலை கோதுமைமா (மைதாமா) உள்ள பாத்திரத்தில் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.

பின்பு சிறிதளவு தண்ணீரை எடுத்து மாக்கலவையின் மேல் எல்லா பக்கமும் பூசவும்.

பின்பு பாத்திரத்தில் மாக்கலவையை வைத்து பாத்திரத்தின் வாயை துணியினால் இறுக மூடி கட்டி (காற்று உட்புகாதவாறு)(3 -6) மணி நேரங்கள் வைத்திருக்கவும் .இப்போது மாவு இரு மடங்காகி இருக்கும்.

பின்னர் மாவை சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து சப்பாத்திக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டி நடுவில் செய்து வைத்திருக்கும் கறி கலவையை வைக்கவும்.

அதன் பின்பு அதை ரோல்ஸ்க்கு மடிப்பதை போல ஆனால் சிறிதளவு தடிப்பமாகவும் மடிக்கவும்.

(பின்பு ஒரு கிண்ணத்தில் 2 முட்டை மஞ்சள் கருவை போட்டு முள்ளுகரண்டியால் அடிக்கவும்).

அதன் பின்பு மடித்த பணிஸின் மேலே முட்டை மஞ்சள் கருவை தடவவும்.

மஞ்சள் கரு தடவிய பணிஸ் மேலே பிரஷினால் எண்ணெயை பணிஸ் முழுவதும் தடவி வைக்கவும்.

இதைப் போல் தேவையான அளவு செய்துக் கொள்ளவும். இந்த பணிஸை பேக் செய்யும் தட்டில் இடைவெளி விட்டு அடுக்கவும்.

அவனை முதலிலேயே 350 F அல்லது 250°C சூடுப்படுத்தி வைக்கவும்.

சூடுப்படுத்திய அவனில் பணிஸை அடுக்கிய தட்டை வைக்கவும்,

25 நிமிடங்களுக்கு பின்பு அவனில் சூட்டை குறைக்க வும் (200°c அல்லது 300°f). 20 நிமிடங்களுக்கு பின்பு பணிஸை எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கவனிக்க வேண்டிய விஷயங்கள் - குழைக்கும் முறையும், பாத்திரத்தை சுற்றி கட்டி வைக்கும் முறை, பேக் பண்ணும் முறை, பிரட்டல் கறி.

எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கறி பணிஸை எல்லோரும் விரும்பி சுவைத்து உண்பார்கள். அத்துடன் இது பிரயாணங்கள் செய்யும் போது இலகுவாக எடுத்து சென்று உண்ணக்கூடிய சிற்றுண்டியாகும்.