கறிவேப்பிலை துவையல்
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை (உருவிய) - 2 கப்
பச்சைமிளகாய் - 4
உப்பு - தேவையானளவு
உள்ளி (வெள்ளைவெங்காயம்) - ஒரு பல் (சிறியது)
வெங்காயம் - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு(லைம்(லெமன்)ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
உருவிய கறிவேப்பிலைகளை கழுவி வைக்கவும். பச்சைமிளகாயை உப்புடன் சேர்த்த அரைக்கவும்.
அரைத்த பின்பு உள்ளி, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து அரைக்கவும்
பின்பு தேங்காய்ப்பூ சேர்த்து அரைக்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக அரைத்த பின் தேசிக்காய்ச்சாறு (லெமன் லைம் ஜுஸ்) சேர்க்கவும். இதோ சுவையான கறிவேப்பிலை துவையல் தயார்.
குறிப்புகள்:
முடி கொட்டாமல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரவும், கண்பார்வை பிரகாசமாக தெரியவும் , இரத்தகொதிப்பு நோய் குறையவும், சர்க்கரை நோய் குறையவும் கறிவேப்பிலை உதவும் ஆகவே உடனடியாக கறிவேப்பிலை துவையல் செய்து உண்பதே சால சிறந்தது. தேங்காய்ப்பூ சாப்பிட கூடாதவர்கள் தேங்காய்ப்பூவிற்கு பதிலாக உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி (ஒரளவுவறுத்து), கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி(ஒரளவுவறுத்து)சேர்த்து அரைக்கவும்.