கருதியா (Garudiya) முறை 1

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. டூனா மீன் (Fresh) - 250 கிராம்

2. உப்பு

செய்முறை:

டூனா மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

1 லிட்டர் நீரும் தேவையான உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க துவங்கியதும் மீன் சேர்த்து வேக விடவும்.

கொதிக்க கொதிக்க மேலே எண்ணெய் போல் படியும் அழுக்கை நீக்கி கொண்டே இருக்க வேண்டும். நீர் தெளிவாக இருக்க வேண்டும்.

மீன் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்:

இது மாலத்தீவின் முக்கிய உணவு. இதை ரோஷி எனப்படும் ரொட்டி அல்லது சாதத்துடன் சாப்பிடுவார்கள். தினமும் இவர்கள் உணவில் இது நிச்சயம் இருக்கும். இதை சூப் போலவும் சாப்பிடுவார்கள். இத்துடன் நறுக்கிய வெங்காயம், இந்த ஊரின் மிருஸ் எனப்படும் சிறிய மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவார்கள்.