கனேடியன் டர்க்கி கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த டர்க்கி - அரைக்கிலோ

நறுக்கிய வெங்காயம் - ஒன்று

நறுக்கிய குடைமிளகாய் - ஒன்று

நறுக்கிய செலரி - அரைக்கோப்பை

நறுக்கிய கேரட் - அரைக்கோப்பை

பைனாப்பிள் துண்டுகள் - அரைக்கோப்பை

மைதா - மூன்று மேசைக்கரண்டி

சிக்கன் ஸ்டாக் - இரண்டு கோப்பை

கறிபவுடர் - ஒரு தேக்கரண்டி

பெப்ரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி

பேஸில் தூள் - அரை தேக்கரண்டி

கனோலா எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

நறுக்கிய வெங்காயத்தாள் - இரண்டு

செய்முறை:

டர்க்கியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு சிறிய கோப்பையில் மைதா, கறி பவுடர், பெப்ரிகா, பேஸில் தூள் மற்றும் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி நன்கு கலக்கி வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி காயவைத்து அதில் வெங்காயம், குடைமிளகாய், செலரி, கேரட் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதை தொடர்ந்து நறுக்கிய டர்க்கி இறைச்சியைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு கலக்கிவைத்துள்ள ஸ்டாக்கை ஊற்றி பைனாப்பிள் துண்டுகளையும் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பிக்கும் முன் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேகவைத்து உப்பையும், மிளகுத்தூளையும் சேர்த்து நன்கு கலக்கி வெங்காயத்தாளைத் தூவி இறக்கி விடவும்.

இந்த சுவையான டர்க்கி கறியை வெள்ளைச் சோற்றுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: