கத்தரிக்காய் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் (நீளமாக மெல்லியதாக வெட்டியது) - அரை கிலோ
வெங்காயம்(நறுக்கியது) - கால் கிலோ
தக்காளி(நறுக்கியது) - கால் கிலோ
இஞ்சிவிழுது - ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடானதும் அதில் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.
சூடான எண்ணெயில் கடுகை போட்டு அது வெடித்ததும் அதில் சீரகம் போட்டு தாளிக்கவும்.
தாளித்ததும் அதில் இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு) விழுது ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். ஒரளவு வதங்கிய பின்பு அதனுடன் தக்காளியை போட்டு வதக்கவும்.
இவையாவும் ஒரளவு வதங்கியவுடன் இதில் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.
அதன் பின்பு அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொண்டே அடுப்பிலிருந்து இறக்கவும்.
இறக்கிய பின்பு அதை சாதம்(சோறு), ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா இவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
கத்தரிக்காய் ரோஸ்ட் மிக மிக சுவையானதும். சத்துக்கள் நிறைந்ததும் எல்லோருக்கும் விருப்பமான ஓரு கறிவகையாகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள்- கத்தரிக்காய்(நீளமாக மெல்லியதாக வெட்டியது), நன்றாக வதக்கிக் கொண்டே அடுப்பிலிருந்து இறக்கவும். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.